ADDED : ஜூலை 27, 2024 12:30 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யாமல், கடந்த ஆண்டு நிதியான, 86 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து, கூலி விவசாயத் தொழிலாளர்களை வஞ்சித்த மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, நொச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில குழு உறுப்பினர் லெனின்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செல்வராசு கண்டன உரையாற்றினார். விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.