ADDED : ஜூலை 04, 2024 05:53 AM
ஓசூர்: சூளகிரி அருகே கட்டிகானப்பள்ளியை சேர்ந்-தவர் வெங்கடேஷ், கூலித்தொழிலாளி; இவரது மகள் லட்சுமி, 17, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள ஒரு கல்லுாரியில் முதலாமாண்டு சேர்க்கையில் பங்கேற்று விட்டு, வீட்டிற்கு வந்திருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளி-ரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாய-மானார். இந்நிலையில், கட்டிகானப்பள்ளி கிரா-மத்தில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக மிதந்தார். சடலத்தை மீட்ட சூளகிரி போலீசார், மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்-தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, விசாரிக்கின்றனர்.