Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சாலை பணிக்கு வீடுகளை இடிக்க முயற்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்

சாலை பணிக்கு வீடுகளை இடிக்க முயற்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்

சாலை பணிக்கு வீடுகளை இடிக்க முயற்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்

சாலை பணிக்கு வீடுகளை இடிக்க முயற்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்

ADDED : ஜூலை 02, 2025 01:40 AM


Google News
தேன்கனிக்கோட்டை, தர்மபுரி, அதியமான்கோட்டையில் இருந்து, ராயக்கோட்டை, ஓசூர் வழியாக, கர்நாடகா மாநிலம், நெரலுார் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக, ராயக்கோட்டை அடுத்த ஊடேதுர்க்கம் பஞ்., உட்பட்ட வெள்ளிச்சந்தை கிராமத்தில், சாலையோரம் புறம்போக்கு நிலத்தில் இருந்த, 20க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டன.

அப்பகுதி மக்களுக்கு வரகானப்பள்ளி அருகே வழங்கப்பட்ட மாற்றிடம் பாறைகள் நிறைந்து காணப்படுவதால், வீடுகளை இழந்த மக்களால் அங்கு வீடு கட்ட முடியவில்லை.அப்பகுதியில் மேலும், 26க்கும் மேற்பட்ட வீடுகளை நேற்று இடிக்க போவதாக அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இதையறிந்த, மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா தலைமையில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட தலைவர் முருகேஷ், செயலாளர் பிரகாஷ், மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், மாவட்ட குழு உறுப்பினர் அனுமப்பா உள்ளிட்டோரிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே வழங்கப்பட்ட இடத்திற்கு பதிலாக மாற்றிடம் வழங்க வேண்டும். தற்போது இடிக்கப்பட உள்ள வீடுகளுக்கு பதில், மாற்றிடத்தில் வீடு கட்டி கொடுத்த பின் தான், இடிக்க வேண்டும் என, டி.எஸ்.பி., ஆனந்தராஜ், துணை தாசில்தார் சுபாஷினி தலைமையில், நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us