ADDED : ஜூலை 02, 2025 01:40 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி சார்பில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடந்தது.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி தலைமை வகித்தார். நகர செயலாளர் சீனிவாசன், ஆண்டாள் திருப்பாவை கூட்ட தலைவர் கலா, அன்னையர் முன்னணியை சேர்ந்த தேவி, தீபா உள்பட, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவரும் முருகன் கோவில் முன்பு அமர்ந்து, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டனர்.