/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம் ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்
ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்
ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்
ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்
ADDED : ஜூலை 04, 2025 01:31 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 12வது வார்டு பாப்பாரப்பட்டியில், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., 'ஓரணியில் தமிழ்நாடு' நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அ.தி.மு.க.,வினர் அதிகமுள்ள அப்பகுதியில், தி.மு.க.,வினர் பிரசாரத்தை துவக்கினர். அப்போது அப்பகுதி மக்கள், 'எங்கள் வீட்டிற்கு மேலே மின்கம்பி செல்கிறது. சாக்கடை கால்வாய் வெளியேற வழியில்லை. மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் வருகிறது. இதை, பல ஆண்டுகளாக கூறியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.
இதையடுத்து மின்கம்பி செல்லும் பாதையை குடியிருப்புகள் மேலிருந்து அகற்றி புதுப்பாதையில் அமைக்க, மின்வாரிய அலுவலர்களிடம் வலியுறுத்திய மதியழகன் எம்.எல்.ஏ., அதற்கான கட்டணத்தையும் கட்டினார். மழைக்காலத்திற்கு முன்பே, சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படும் என, வாக்குறுதி அளித்தார்.
மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், நகர, தி.மு.க., பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.