Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வேளாண் விற்பனை கூடத்தில் 16ல் எள் கொள்முதல் தொடக்கம்

வேளாண் விற்பனை கூடத்தில் 16ல் எள் கொள்முதல் தொடக்கம்

வேளாண் விற்பனை கூடத்தில் 16ல் எள் கொள்முதல் தொடக்கம்

வேளாண் விற்பனை கூடத்தில் 16ல் எள் கொள்முதல் தொடக்கம்

ADDED : ஜூலை 04, 2025 01:30 AM


Google News
பென்னாகரம், பென்னாகரம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், எள் கொள்முதல் குறித்து, விற்பனை கூட மேலாளர், வீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டாரத்தில், தற்போது எள் அறுவடை பருவம் துவங்கியுள்ளது. பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும், 16 முதல், பிரதி புதன்கிழமையன்று, எள் ஏலம் தொடங்குகிறது. இங்கு, உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு, ஏலம் எடுக்க உள்ளனர். இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்ய, இலவச மின்னணு எடை மேடை, உலர் களம் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. குறைந்த வாடகையில் கிடங்கு வசதி, ஏலம் முடிந்தவுடன் உடனடி பணப்பட்டுவாடா மற்றும் அன்றாட சந்தை நிலவரம் குறித்த விபரம் அறிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, எள் அறுவடை செய்துள்ள விவசாயிகள் இதில், கலந்து கொண்டு, தங்கள் எள்ளை அதிக விலைக்கு விற்று பயனடையலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us