/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கி.கிரியில் 2ம் கட்டமாக இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் கி.கிரியில் 2ம் கட்டமாக இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
கி.கிரியில் 2ம் கட்டமாக இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
கி.கிரியில் 2ம் கட்டமாக இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
கி.கிரியில் 2ம் கட்டமாக இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : செப் 02, 2025 01:12 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக இன்று(2-ம் தேதி), நாளை(3-ம் தேதி) மற்றும் வரும் 6ல், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கிறது.
அதன்படி இன்று கிருஷ்ணகிரி நகராட்சியில் இன்று வார்டு எண் 24, 26 மற்றும் 27 ஆகிய பகுதிகளுக்கு கிருஷ்ணகிரி பாரதியார் தெருவில் உள்ள எஸ்.கே.பி., மஹாலிலும், ஊத்தங்கரை டவுன் பஞ்.,ல், வார்டு 8 முதல், 15 வரை உள்ள பகுதிகளுக்கு கல்லாவி ரோடு, பேரூராட்சி கல்யாண மண்டபத்திலும், ஓசூர் ஒன்றியத்தில் பெலத்துார் பஞ்.,க்கு பெலத்துார் வி.பி.ஆர்.சி., கட்டடத்திலும், தளி ஒன்றியத்தில் கோலட்டி, சாலிவரம் மற்றும் நொகனுார் பஞ்சாயத்துகளுக்கு பிக்கனபள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பர்கூர் ஒன்றியத்தில் வரட்டனபள்ளி, பெலவர்த்தி பஞ்.,களுக்கு வரட்டனபள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் மிட்டஹள்ளி பஞ்., அலுவலக வளாகத்திலும் என, 6 முகாம்கள் நடக்க உள்ளன. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.