Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீர்; வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீர்; வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீர்; வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீர்; வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

ADDED : ஜூலை 15, 2024 12:12 AM


Google News
ஓசூர்: சூளகிரியில், சாலையில் ஓடும் கழிவு நீரால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சுகாதார சீர்-கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி நகரில் வீடுகள் மற்றும் ஓட்டல்-களில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர், பேரிகை சாலையிலுள்ள முனீஸ்வரன் கோவில் அருகே சாலையில் பெருக்-கெடுத்து ஓடுகிறது. இப்பகுதியில் சாலையோரம் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால், கழிவுநீர் சாலையில் ஓடுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. கனரக வாகனங்கள் சாலையில் செல்லும்போது, அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்-டிகள் மற்றும் பாதசாரிகள் மீது கழிவுநீர் தெறிக்கிறது. இதை அறிந்திருந்தும், சூளகிரி ஒன்றிய மற்றும் பஞ்., நிர்வாகம் சாலை-யோரம் சாக்கடை கால்வாய் அமைக்க முன்வரவில்லை. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால், கொசுக்கள் உற்-பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாதிக்காத வகையில், கழிவு நீர் கால்வாய் அமைத்து, சாலைக்கு கழிவு நீர் வராத வகையில், நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us