ADDED : ஜூலை 15, 2024 12:16 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., பால-முருகன் மற்றும் போலீசார், குருபராத்தப்பள்ளியில் உள்ள மஹா-ராஷ்டிரா பஞ்சாபி தாபாவில் சோதனை செய்தனர்.
அங்கு, 20 பாக்கெட் கர்நாடகா மாநில மதுபானம், 1.76 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்தனர். இதனால், மஹாராஷ்டிரா பஞ்சாபி தாபாவில் பணியாற்றி வந்த, சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜன், 50, சூளகிரி அடுத்த அட்ட-குறுக்கியை சேர்ந்த சபரீஷ், 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, மதுபானம், புகையிலை பொருட்கள் மற்றும் ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக் பறி-முதல் செய்யப்பட்டது.