Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காய்ச்சல் பாதித்த மாணவி உயிரிழப்பு

காய்ச்சல் பாதித்த மாணவி உயிரிழப்பு

காய்ச்சல் பாதித்த மாணவி உயிரிழப்பு

காய்ச்சல் பாதித்த மாணவி உயிரிழப்பு

ADDED : ஜூலை 15, 2024 12:16 AM


Google News
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பொம்மதாத்-தனுார் அருகே இருளப்பட்டியை சேர்ந்தவர் முருகன்.

இவரது மகள் லட்சுமக்கா, 7; காலேப்பள்ளி அரசு துவக்கப்பள்ளியில், 2 ம் வகுப்பு படித்து வந்தார்; இவரது தாய் கடந்த, 2 ஆண்டுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதனால் மாணவி லட்சுமக்கா, தன் தாத்தா வீட்டில் வசித்து வந்தார்; கடந்த, 12 ல் மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், கூத்தனப்பள்ளியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்-துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். கெல-மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us