/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ADDED : செப் 01, 2025 02:01 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரகுராமன் வரவேற்றார். மாவட்ட தலைவர் மயில்வாணன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச்செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். தலைவர் தமிழ்
மணியன், பொருளாளர் முருகேசன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் பாலசந்தர் நன்றி கூறினார்.
கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை, 40 ஆண்டுகளாக உள்ள நடைமுறைப்படி, பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 50 சதவீதம் வழங்க வேண்டும். இளையோர், மூத்தோர் ஊதிய முரண்பாட்டில் வெவ்வேறு பாடங்களுக்கு ஊதிய முரண்பாடு சரிசெய்ய இயலாது என்று, தற்போது போடப்பட்டுள்ள அரசு விதியை திரும்பப் பெற வேண்டும். தற்போதுள்ள, 11 மற்றும், 12ம் வகுப்பு பாடத்திட்டம் அதிகமாக உள்ளதால், அனைத்து பாடங்களுக்குமான பாடத்தை குறைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.