/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விநாயகர் சதுர்த்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட190 சிலைகள் கே.ஆர்.பி., அணையில் கரைப்பு விநாயகர் சதுர்த்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட190 சிலைகள் கே.ஆர்.பி., அணையில் கரைப்பு
விநாயகர் சதுர்த்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட190 சிலைகள் கே.ஆர்.பி., அணையில் கரைப்பு
விநாயகர் சதுர்த்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட190 சிலைகள் கே.ஆர்.பி., அணையில் கரைப்பு
விநாயகர் சதுர்த்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட190 சிலைகள் கே.ஆர்.பி., அணையில் கரைப்பு
ADDED : செப் 01, 2025 02:00 AM
கிருஷ்ணகிரி:விநாயகர் சதுர்த்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட, விநாயகர் சிலைகள் நேற்று கே.ஆர்.பி., அணையில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த, 27ல் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,500 சிலைகளை வைத்து, பக்தர்கள் வழிபட்டனர். 3ம் நாள் வரை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், 70 சிலைகள் கரைக்கப்பட்டன. 5ம் நாளான நேற்று, இந்து முன்னணி சார்பில், மாவட்ட தலைவர் கலைகோபி தலைமையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி ஆனந்த் தியேட்டர் சாலையில் துவங்கி, பெங்களூரு சாலை, தர்மராஜா கோவில் சாலை, காந்தி சாலை, நேதாஜி சாலையில் சென்று அங்கிருந்து மதியம், 3:00 மணிக்கு, ஊர்வலமாக புறப்பட்டு கே.ஆர்.பி., அணைக்கு சென்று, விநாயகர் சிலைகளை கரைத்தனர். இதையொட்டி, டி.எஸ்.பி.,க்கள் முரளி, சீனிவாசன் ஆகியோர் தலைமை
யில், அதிரடிப்படையினர் உள்பட, 130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கே.ஆர்.பி., அணையில், 30 போலீசார் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விநாயகர் சிலைகளை, தனியாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அணையில் கரைத்தனர். நேற்று மாலை, 5:30 மணி வரை, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இருந்து, 190 சிலைகள் கரைக்கப்பட்டன. இதே போல், மாதேப்பட்டி மற்றும் கும்மனுாரில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.