/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சமையல் செய்தபோதுலாரி தீப்பற்றி எரிந்து நாசம் சமையல் செய்தபோதுலாரி தீப்பற்றி எரிந்து நாசம்
சமையல் செய்தபோதுலாரி தீப்பற்றி எரிந்து நாசம்
சமையல் செய்தபோதுலாரி தீப்பற்றி எரிந்து நாசம்
சமையல் செய்தபோதுலாரி தீப்பற்றி எரிந்து நாசம்
ADDED : செப் 01, 2025 02:01 AM
கிருஷ்ணகிரி:பீஹார் மாநிலம் கயாவை சேர்ந்த லாரி ஓட்டுனர் ராஜூதாஸ், 45. இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து லாரியில் சோலார் பேனல்களை ஏற்றிக் கொண்டு பெங்களூரு சென்றார். அங்கு பேனல்களை இறக்கி விட்டு சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகே நிறுத்தி, லாரி ஓட்டுனர் சமையல் செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் லாரியில் தீப்பற்றியது. இதில் லாரியில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. கிருஷ்ணகிரி தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.