/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பட்டா கோரி மலைகிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனுபட்டா கோரி மலைகிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு
பட்டா கோரி மலைகிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு
பட்டா கோரி மலைகிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு
பட்டா கோரி மலைகிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு
ADDED : ஜூலை 10, 2024 06:50 AM
கிருஷ்ணகிரி: வீட்டுமனை பட்டா கோரி மலைகிராம மக்கள், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், நாரலப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ஏக்கல்நத்தம் மலைகிராமத்தை சேர்ந்த, 35க்கும் மேற்பட்டோர், இ.கம்யூ., வேப்பனஹள்ளி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.அப்போது, அவர்கள் கூறியதாவது: ஏக்கல்நத்தம் மலைகிராமத்தில், 150 குடும்பத்திற்கும் மேற்பட்ட, 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம்.
கடந்த, 150 ஆண்டுகளாகவும், பல தலைமுறைகளாக இங்கு வசித்து வரும் எங்களை காலி செய்யக்கூறி, வனத்துறையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். நாங்கள் வசித்து வரும் நிலங்களுக்கு நாங்கள் பல காலமாக பி.மெமோ, கந்தாய ரசீது, உள்ளிட்டவைகளை கட்டி உள்ளோம். நாங்கள் அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களை நம்பியே வாழ்ந்து வருகிறோம். இது குறித்து மாவட்ட வன அலுவலரிடமும் மனு அளித்துள்ளோம். எனவே, எங்கள் வாழ்வாதாரமான அனுபவ நிலத்திற்கு, பட்டா வழங்கக்கோரி கிருஷ்ணகிரி, ஆர்.டி.ஓ., அலுவலகத்திலும் தனித்தனியாக மனு அளித்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.