/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மின்தடை குறைக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்க விவசாயிகள் கோரிக்கை மனுமின்தடை குறைக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்க விவசாயிகள் கோரிக்கை மனு
மின்தடை குறைக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்க விவசாயிகள் கோரிக்கை மனு
மின்தடை குறைக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்க விவசாயிகள் கோரிக்கை மனு
மின்தடை குறைக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்க விவசாயிகள் கோரிக்கை மனு
ADDED : ஜூலை 10, 2024 06:50 AM
கிருஷ்ணகிரி: மின்தடைகளை குறைக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்கக்கோரி விவசாயிகள், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலகத்தில், கிருஷ்ணகிரி கோட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
கோட்ட செயற்பொறியாளர் பவுன்ராஜ் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தலைமை வகித்து பேசியதாவது:மழைக்காலம் துவங்கி உள்ளதையடுத்து மாவட்டம் முழுவதும் மின்வாரியத்தினர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி கோட்ட அளவில் மின் பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் இன்ஸ்சுலேட்டர்களை மாற்ற, சேதமடைந்த, சாய்ந்த மின்கம்பங்கள் மாற்றும் பணிகளும் நடந்து வருகிறது. மாவட்டத்தில் எங்கும் குறை மின்னழுத்தம் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் பிரச்னைகள் குறித்து, பொதுமக்களும் மின் வாரியத்தினருக்கு புகார் அளிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் மற்றும் விவசாயிகள், சப்பானிப்பட்டி பகுதிகள் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், இதை சீர் செய்ய ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை மனு அளித்தனர். இது தவிர, 10க்கும் மேற்பட்ட மனுக்களை, பொதுமக்கள் அளித்தனர். அவை அனைத்தும் உடனடியாக சரி செய்யப்படும் என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், மின் வாரிய ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.