/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2ம் கட்டமாக 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவக்கம்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2ம் கட்டமாக 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2ம் கட்டமாக 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2ம் கட்டமாக 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2ம் கட்டமாக 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 10, 2024 06:50 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் 2-வது கட்டமாக ஊரக பகுதிகளில் நாளை முதல் (11-ம் தேதி) வரும், ஆக., 30 வரை நடக்கிறது என கலெக்டர் சரயு தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக பகுதிகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது: 'மக்களுடன் முதல்வர்' திட்டம், 2-வது கட்டமாக ஊரக பகுதிகளில் செயல்படுத்தும் விதமாக நாளை (11-ம் தேதி), தர்மபுரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.அதன் படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நாளை முதல் வரும் ஆக., 30-ம் தேதி வரை இத்திட்டம் நடக்கிறது. நாளை கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி கிராமத்திலும், பர்கூர் ஒன்றியத்தில் கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும் காலை, 10:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நடக்கவுள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்காணும் முகாம் நாட்களில், அவரவர் வசிக்கும் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, அவர் பேசினார்.