/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து அவசியம்வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து அவசியம்
வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து அவசியம்
வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து அவசியம்
வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து அவசியம்
ADDED : ஜூலை 05, 2024 12:03 AM
கிருஷ்ணகிரி: ஓசூர், பேடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் வளரிளம் பெண்களுக்கான நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் பொன்நாகேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில், ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், அது இளம்பெண்களின் உடல் நலத்தில் எவ்வாறு செயல்படுகின்றது என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. ஐந்து வகையான ஊட்டச்சத்து உணவு முறைகள் பற்றியும், மாதவிடாய் சுழற்சி காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை பற்றியும் ஊட்டச்சத்து தோழிகள் மூலம் நாடகம், விளையாட்டு மூலம் எடுத்துரைக்கப்பட்டது.