/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சூளகிரி, ஓசூர் வட்டாரத்தில் வேளாண் முன்னேற்ற குழு பயிற்சிசூளகிரி, ஓசூர் வட்டாரத்தில் வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி
சூளகிரி, ஓசூர் வட்டாரத்தில் வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி
சூளகிரி, ஓசூர் வட்டாரத்தில் வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி
சூளகிரி, ஓசூர் வட்டாரத்தில் வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி
ADDED : ஜூலை 05, 2024 12:03 AM
கிருஷ்ணகிரி: சூளகிரி வட்டாரத்தில் அட்மா திட்டத்தில், கும்பளம் கிராமத்தில் வேளாண் முன்னேற்ற குழு குறித்த பயிற்சி நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் ஜான் லுார்து சேவியர் தலைமை வகித்து பேசுகையில், ''சூளகிரி வட்டாரத்தில் மொத்தமுள்ள, 40 கிராமங்களில், 25க்கும் மேற்பட்ட இடங்களில், வேளாண் முன்னேற்ற குழு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், திட்டங்கள் மற்றும் மானியங்களை மக்களிடையே சேர்த்தல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளின் பயன்கள், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து, விவசாயிகள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே. மத்திய அரசு அறிவித்த படி உலக சிறுதானிய ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயிகள் சிறுதானியம் மற்றும் பயறு வகைகளை பயிரிட்டு மானியங்களை பெற்று கொள்ளலாம். இதற்குண்டான விதைகள், மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்,'' என்றார்.பஞ்., தலைவர் ராஜேந்தி ரன், உதவி தோட்டக்கலை அலுவ லர் திருமுருகன், அதியமான் கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முஹம்மது ரபி, பழனிசாமி செய்திருந்தனர்.அதேபோல ஓசூர் வட்டாரம், கொத்தகொண்டப்பள்ளியில் நடந்த கிராம வேளாண் முன் னேற்ற குழு பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். காரீப் பருவத்தில் பயிரிடும் பயிர்கள் குறித் தும், விதைப்பண்ணை அமைப்பதன் அவசியத்தை குறித்தும் விளக்கினார்.