Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்

ADDED : ஜூலை 05, 2024 12:03 AM


Google News
கிருஷ்ணகிரி: அரசு கலைக்கல்லுாரி அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மதியம், வாயிற்முழக்க போராட்டம் நடந்தது.

மாநில பொருளாளர் பிரிய லட்சுமி தலைமை வகித்தார். கவுரவ விரிவு-ரையாளர்கள் செந்தில், தங்கையா ஆகியோர் பேசினர்.போராட்டத்தில், அரசாணை, 56ன் படி கவுரவ விரிவுரையாளர்-களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, தமிழக அரசு விரைந்து நடைமு-றைப்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி, 2019 முதல் மாதம் ஒன்றுக்கு, 50,000 ரூபாய் ஊதியம் வழங்கி, அரியர் மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும். கற்பித்தல் பணி அனுப-வத்திற்கு, ஆண்டிற்கு தலா, 2 மதிப்பெண் வழங்குவதாக சொல்லி, பணியில் அமர்த்தி, இப்போது எழுத்துத் தேர்வை நடத்-துவதாக அறிவித்திருப்பது எங்களை வஞ்சிக்கும் செயலாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடாக, 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மகப்பேறு மருத்துவ விடுப்பு, இறந்-தவர்களுக்கு இழப்பீடு, ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கண்டன கோஷங்-களை எழுப்பினர்.கவுரவ விரிவுரையாளர்கள் சீனிசங்கர், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us