/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட விழிப்புணர்வு முகாம்புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட விழிப்புணர்வு முகாம்
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட விழிப்புணர்வு முகாம்
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட விழிப்புணர்வு முகாம்
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 05, 2024 12:03 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் கீழ் இயங்கும், 'புதுமை பெண் திட்டம்' மற்றும் 'தமிழ் புதல்வன் திட்டம்' குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் அனுராதா தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர், மூத்த பேராசிரியர் ஜெயகுமார் முன்னிலை வகித்தார்.இதில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஷெர்லி மார்கிரேட், ஒருங்கிணைந்த சேவை மையம் பர-மேஸ்வரி ஆகியோர் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்-கினர். முகாமில், ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை மற்றும் 'தமிழ் புதல்வன் திட்டம்' ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் சகாய லியோன், கல்லுாரியின் அனைத்து துறை மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.