/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காதி கதர் கிராம வளர்ச்சி வாரியத்திற்கு சொந்தமான கட்டடம் அனுமதியின்றி இடிப்புகாதி கதர் கிராம வளர்ச்சி வாரியத்திற்கு சொந்தமான கட்டடம் அனுமதியின்றி இடிப்பு
காதி கதர் கிராம வளர்ச்சி வாரியத்திற்கு சொந்தமான கட்டடம் அனுமதியின்றி இடிப்பு
காதி கதர் கிராம வளர்ச்சி வாரியத்திற்கு சொந்தமான கட்டடம் அனுமதியின்றி இடிப்பு
காதி கதர் கிராம வளர்ச்சி வாரியத்திற்கு சொந்தமான கட்டடம் அனுமதியின்றி இடிப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:03 AM
ஓசூர்: கெலமங்கலத்தில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு, 500க்கும் மேற்பட்டோர் கைத்தறி நெசவு செய்தனர்.
இதனால், அப்பகு-தியில் கிராம மக்களின் வளர்ச்சிக்காக காதி கதர் கிராம வளர்ச்சி வாரியம் சார்பில், கட்டடம் கட்டப்பட்டு அதில், நெசவு தொழி-லுக்கு தேவையான நுால்கள் வழங்கப்பட்டு, நெசவாளர்கள் உற்-பத்தி செய்யும் ஆடைகள் கொள்முதல் செய்யப்பட்டது. நாள-டைவில் நெசவு தொழில் நலிவடைந்ததால், காதி கதர் வாரியத்-திற்கு சொந்தமான கட்டடம் பயனின்றி மூடப்பட்டு பாழடைந்-தது. நேற்று, டவுன் பஞ்., நிர்வாகம் அந்த கட்டடத்தை பொக்லைன் மூலம் இடித்தனர். இதையறிந்த சேலத்திலுள்ள கதர் வாரிய உதவி இயக்குனர் சந்-திரசேகரன், நேரில் வந்து, தங்கள் துறைக்கு சொந்தமான கட்ட-டத்தை அனுமதியின்றி எதற்கு இடிக்கப்பட்டது என டவுன் பஞ்., நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டார். இதற்கு டவுன் பஞ்., நிர்வா-கத்தினர், அந்த கட்டடத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதால் இடித்தோம் என தெரிவித்துள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் புகார் படி, கெலமங்கலம் போலீசார் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.