/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா ஆபீசில் பேச்சுவார்த்தை வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா ஆபீசில் பேச்சுவார்த்தை
வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா ஆபீசில் பேச்சுவார்த்தை
வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா ஆபீசில் பேச்சுவார்த்தை
வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா ஆபீசில் பேச்சுவார்த்தை
ADDED : ஜூன் 21, 2025 12:53 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, குல்லட்டி கிராமத்தில், 210க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு குல்லட்டி கிராமத்தில், 3 சென்ட் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, மா.கம்யூ., சார்பில் ஏற்கனவே மனு வழங்கப்பட்டது.
நேற்று காலை, 110க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் பட்டா வழங்க வலியுறுத்தி, மா.கம்யூ., கெலமங்கலம் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், நடராஜன், சேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் இருதயராஜ், அனுமப்பா ஆகியோர் தாலுகா அலுவலகம் சென்றனர். அங்கு தாசில்தார் கங்கை தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பட்டா வழங்கும் பணி, ஒரு வாரத்தில் துவங்கப்படும் என, வருவாய்த்துறை அலுவலர்களால் உறுதியளிக்கப்பட்டது.