/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சிறை நிரப்பும் போராட்டம் குறித்து பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் மனு சிறை நிரப்பும் போராட்டம் குறித்து பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் மனு
சிறை நிரப்பும் போராட்டம் குறித்து பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் மனு
சிறை நிரப்பும் போராட்டம் குறித்து பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் மனு
சிறை நிரப்பும் போராட்டம் குறித்து பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் மனு
ADDED : ஜூன் 21, 2025 12:53 AM
கிருஷ்ணகிரி, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், கிருஷ்ணகிரி சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., அலுவலகத்தில், நேற்று மாலை கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
வரும் ஜூலை 8ல், சென்னையில் நடக்க உள்ள பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளோம். இதற்காக, 2025-26ம் கல்வியாண்டில் நடைபெறும், குறுவட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் இந்திய பள்ளிகளில், பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு போன்ற போட்டிகளுக்கான நடுவர் பணியை முற்றிலுமாக சிறப்பு ஆசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும்.
கலை திருவிழாவின் போது பணிபுரியும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல், மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் நடுவராகவும் பணியாற்ற வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது
பகுதி நேர ஆசிரியர்கள் கருணாநிதி, ஜெய்கணேஷ், பாவேந்திரன், ஆறுமுகம், மாதப்பன், அமுதா, எலிசபெத், பூண்டி மேரி, வித்யா உள்பட பலர் உடன்
இருந்தனர்.