/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஊத்தங்கரையில் இன்று மாரத்தான் ஓட்டம் ஊத்தங்கரையில் இன்று மாரத்தான் ஓட்டம்
ஊத்தங்கரையில் இன்று மாரத்தான் ஓட்டம்
ஊத்தங்கரையில் இன்று மாரத்தான் ஓட்டம்
ஊத்தங்கரையில் இன்று மாரத்தான் ஓட்டம்
ADDED : ஜூலை 05, 2025 01:17 AM
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதானத்தில் இன்று (ஜூலை 5) காலை 6:00 மணிக்கு மாபெரும் மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள, 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம்.
இளைஞர்களின் திறமையை ஊக்குவித்தல், கிராம மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல், நாட்டுப்பற்றும் சமூக பணிகளும் ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியை பிராணா கேந்திரா ஆசிரமம் மற்றும் ஊத்தங்கரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்த உள்ளனர்.
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.