/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கடைகளில் பூட்டை உடைத்து ரூ.55 ஆயிரம் திருட்டு கடைகளில் பூட்டை உடைத்து ரூ.55 ஆயிரம் திருட்டு
கடைகளில் பூட்டை உடைத்து ரூ.55 ஆயிரம் திருட்டு
கடைகளில் பூட்டை உடைத்து ரூ.55 ஆயிரம் திருட்டு
கடைகளில் பூட்டை உடைத்து ரூ.55 ஆயிரம் திருட்டு
ADDED : ஜூலை 05, 2025 01:19 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை பகுதியில் கடைகளின் பூட்டை உடைத்து, 55 ஆயிரம் ரூபாய் திருடியது தொடர்பாக, 'சிசிடிவி' காட்சி வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சேலம் சாலையில் உள்ள கோழி இறைச்சி கடை, காய்கறி கடைகளின் பூட்டை உடைத்து, இறைச்சி கடையில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய், காய்கறி கடையில் இருந்து, 5,000 ரூபாயை மர்ம நபர் திருடி சென்றார்.
இது குறித்து இறைச்சி கடை உரிமையாளர் கமல், நேற்று முன்தினம் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவாகியுள்ள மர்ம நபரை தேடி வருகின்றனர். இக்காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.