/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கர்நாடக மது வகைகளை காரில் கடத்தியவர் கைது கர்நாடக மது வகைகளை காரில் கடத்தியவர் கைது
கர்நாடக மது வகைகளை காரில் கடத்தியவர் கைது
கர்நாடக மது வகைகளை காரில் கடத்தியவர் கைது
கர்நாடக மது வகைகளை காரில் கடத்தியவர் கைது
ADDED : செப் 12, 2025 01:10 AM
ஓசூர், ஓசூர், சிப்காட் இன்ஸ்பெக்டர் சையது முபாரக் மற்றும் போலீசார், ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த, மாருதி சிப்ட் டிசையர் காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் கர்நாடக மது வகைகள், 36 பாட்டில்கள் மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தன.
இதன் மதிப்பு, 32,850 ரூபாய்.விசாரணையில், பெங்களூருவில் கர்நாடக மது, புகையிலை பொருட்களை வாங்கி, விழுப்புரத்திற்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு, கரப்பாளையத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி சதீஷ், 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.