/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பொது கழிப்பிடமாக மாறிய பி.டி.ஓ., ஆபீஸ் செல்லும் பாதை பொது கழிப்பிடமாக மாறிய பி.டி.ஓ., ஆபீஸ் செல்லும் பாதை
பொது கழிப்பிடமாக மாறிய பி.டி.ஓ., ஆபீஸ் செல்லும் பாதை
பொது கழிப்பிடமாக மாறிய பி.டி.ஓ., ஆபீஸ் செல்லும் பாதை
பொது கழிப்பிடமாக மாறிய பி.டி.ஓ., ஆபீஸ் செல்லும் பாதை
ADDED : செப் 12, 2025 01:11 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றிய பி.டி.ஓ., அலுவலகம், மத்துார் பஸ் ஸ்டாண்டை ஒட்டி உள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட, 24 பஞ்.,களை சேர்ந்த மக்கள், பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டை ஒட்டி பி.டி.ஓ., அலுவலகத்திற்கு செல்லும் பாதை உள்ளதால் அதில், அதிகாலை முதல், மத்துாருக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் என அனைவரும், பொது கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பி.டி.ஓ., அலுவலக ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள், துர்நாற்றத்தால் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதை தடுத்து, பாதையை சுகாதாரமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.