/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வீட்டின் சுவர் உடைந்து கூலித்தொழிலாளி சாவு வீட்டின் சுவர் உடைந்து கூலித்தொழிலாளி சாவு
வீட்டின் சுவர் உடைந்து கூலித்தொழிலாளி சாவு
வீட்டின் சுவர் உடைந்து கூலித்தொழிலாளி சாவு
வீட்டின் சுவர் உடைந்து கூலித்தொழிலாளி சாவு
ADDED : செப் 12, 2025 01:10 AM
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த அண்டியூரை சேர்ந்தவர் கண்ணன், 70, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 23ல், கல்லாவி அம்பேத்கர் நகரில் உள்ள தன் மகளின் பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.