Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

ADDED : ஜூன் 04, 2024 04:16 AM


Google News
கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி.,க்கு

நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 309 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை நீர்வரத்து, 649 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 35.75 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சின்னாறு அணையில், 25 மி.மீ., மழை பதிவானது. ‍தொடர்ந்து சூளகிரி, 22; கெலவரப்பள்ளி அணை, 21.40; ஓசூர், 20.30; தளி, 20; ராயக்கோட்டை, 17; தேன்கனிக்கோட்டை, நெடுங்கல், 10; பாரூர், 6.20; கிருஷ்ணகிரி, 5.20; கே.ஆர்.பி., அணை, 3.20; போச்சம்பள்ளி, 2.60 மி.மீ., என, மாவட்டம் முழுவதும், 162.90 மி.மீ., மழை பதிவானது.

* கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு 2ல், 64 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 84 கன அடியாக அதிகரித்தது. கே.ஆர்.பி., அணையிலிருந்து பாரூர் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில், நேற்று, தண்ணீர் திறப்பு, 407 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில், நேற்று, 43.95 அடியாக நீர்மட்டம் இருந்தது.

வெவ்வேறு சம்பவத்தில்

4 பெண்கள் மாயம்ஓசூர்,-

ஓசூர், ராயக்கோட்டை ஹட்கோவை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் மகள் கீர்த்திகா, 19. ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார்; நேற்று முன்தினம் காலை, 6:45 மணிக்கு வீட்டிலிருந்தவர் மாயமானார். அவரது தாய் லதா, 36, புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.

சூளகிரி அடுத்த டி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் வர்ஷா, 20. கிருஷ்ணகிரி தனியார் கல்லுாரியில், பி.ஏ., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த மாதம், 29 காலை, 6:00 மணிக்கு மாயமானார். அவரது தாய் ராதா, 39, புகார் படி, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

சூளகிரி அடுத்த காமன்தொட்டியை சேர்ந்தவர் நாகேஷ் மனைவி உஷா, 22. அவரது சகோதரர் ஹரிஷ் மனைவி சத்தியபிரியா, 20. இருவரும் கடந்த, 1ல் மாலை, 6:00 மணிக்கு, காமன்தொட்டி ஏரிக்கரையில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தனர். அங்கிருந்து இருவரும் மாயமாகினர். உஷாவின் கணவர் நாகேஷ் புகார் படி, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

திருமணம் செய்யும் நோக்கில்கல்லுாரி மாணவி கடத்தல்

ஓசூர்-

கெலமங்கலம் அருகே சங்கரநாராயணபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 42. இவரது மகள் ஸ்ரீமதி, 19, தனியார் கல்லுாரியில், டிப்ளமோ செவிலியர், 2ம் ஆண்டு படிக்கிறார்; இவரை, கெலமங்கலம் அடுத்த பனந்தோப்பை சேர்ந்த ஜீவா, 20, என்பவர், திருமணம் செய்யும் நோக்கில் கடந்த, 29 காலை, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து கடத்தி சென்றதாக, மாணவியின் தந்தை கோவிந்தராஜ் கெலமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் மாணவி ஸ்ரீமதியை தேடி வருகின்றனர்.

கோவில் பூட்டை உடைத்து திருட்டுபோச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, பெண்டரஹள்ளி, ஏ.மோட்டூரில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த, 5,000 ரூபாய் மற்றும் ஒன்னேகால் பவுன் நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வழிப்பறி செய்த 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 4-

கிருஷ்ணகிரி அடுத்த ஜிங்கலுாரை சேர்ந்தவர் சையத் மகபூப், 49, லாரி டிரைவர். இவர் கடந்த, 29 இரவு ஒரப்பம் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். அப்போது பைக்கில் வந்த மூவர், சையத் மகபூப்பை மிரட்டி, அவர் வைத்திருந்த, 20,330 ரூபாயை பறித்து சென்றனர். இது குறித்து சையத் மகபூப் கந்திக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் வழிப்பறி செய்தது, கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பாலாஜி நகரை சேர்ந்த ஜான்சன் ஸ்டாலின், 20, நமாஸ்பாறை பாரதி நகர் அஜித்குமார், 20, சிவசங்கர், 19, என தெரிந்து அவர்களை கைது செய்தனர்.

பூ வியாபாரியை காரை ஏற்றிகொல்ல முயன்ற ரவுடி கைது

ஓசூர்: ஓசூர் ராயக்கோட்டை வீட்டுவசதி வாரிய பகுதியில் வசிப்பவர் பாலாஜி, 37, பூ வியாபாரி; இவர் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, ராயக்கோட்டை சாலையில் மின் நகர் பெட்ரோல் பங்க் எதிரே டி.வி.எஸ்., ஜூபிட்டர் மொபட்டில் சென்றார். அவ்வழியாக காரில் வந்த வாலிபர், அவர் மீது காரை மோதுவது போல் வந்துள்ளார். கேள்வி ‍கேட்ட பாலாஜியை அந்த வாலிபர் ஆபாசமாக பேசினார்.

பாலாஜி புகார் படி, கொலை முயற்சி வழக்குப்பதிந்த ஓசூர் டவுன் போலீசார், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த இம்ரான்கான், 27, என்பவரை கைது செய்தனர். அவர் மீது, ஓசூர் டவுன் போலீசில் கொலை மிரட்டல் வழக்கு, ஓமலுாரில் கொள்ளை வழக்கு, கர்நாடகா மாநிலம் சூர்யா நகர் ஸ்டேஷனில் கொள்ளை முயற்சி வழக்கு என மொத்தம், 10 வழக்குகள் உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us