/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரி தொகுதியில் காங்., வெற்றிகிருஷ்ணகிரி தொகுதியில் காங்., வெற்றி
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்., வெற்றி
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்., வெற்றி
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்., வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 05:43 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கு கடந்த ஏப்., 19ல் தேர்தல் நடந்தது. இத்தொகுதியிலுள்ள, 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம், 16,23,179 வாக்காளர்களில், 11,60,498 பேர் ஓட்டளித்தனர். கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டு எண்ணும் பணி நேற்று நடந்தது.
மொத்தம், 84 மேசைகளில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க, 27 வேட்பாளர்களின் சார்பில், 864 முகவர்கள் ஈடுபட்டனர். இதில், காங்., வேட்பாளர் கோபிநாத், 4,92,883 ஓட்டுகளும், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷ், 3,00,-397 ஓட்டுகளும், பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன், 2,14,125 ஓட்டுகளும், நா.த.க., வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 1,07,083 ஓட்டுகளும் பெற்றனர். அடுத்தபடியாக நோட்டாவிற்கு, 10,982 ஓட்டுகளும் பதிவாகின.