Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கி.கிரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்

கி.கிரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்

கி.கிரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்

கி.கிரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்

ADDED : ஜூன் 04, 2024 04:14 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி ஓட்டுகள் எண்ணப்படும் மையத்தில், 802 போலீசார் உட்பட, 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில்

ஈடுபட உள்ளனர்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் எண்ணப்பட உள்ளன. ஓட்டுகள் எண்ணப்படும் மையத்தில், ஒரு ஏ.டி.எஸ்.பி., 8 டி.எஸ்.பி., 23 இன்ஸ்பெக்டர்கள், 76 எஸ்.ஐ.,க்கள், 771 போலீசார் என மொத்தம், 802 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர, பஸ் ஸ்டாண்ட், கிருஷ்ணகிரி ரவுண்டானா, சேலம் பைபாஸ். டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூடுதலாக, 500 போலீசார் உள்பட, 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வருபவர்கள், அடையாள அட்டை அணிந்து வர வேண்டும். அவர்களின் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us