/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பாசன நீர் சில மணி நேரத்தில் நிறுத்தம்பாசன நீர் சில மணி நேரத்தில் நிறுத்தம்
பாசன நீர் சில மணி நேரத்தில் நிறுத்தம்
பாசன நீர் சில மணி நேரத்தில் நிறுத்தம்
பாசன நீர் சில மணி நேரத்தில் நிறுத்தம்
ADDED : ஜூலை 15, 2024 01:26 AM
ஓசூர்: கெலவரப்பள்ளி அணையிலிருந்து, வலது வாய்க்காலில் முதல்-போக பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் சில மணி நேரத்தில் நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கெலவரப்பள்ளி அணையின் வலது வாய்க்காலில், 26 கன அடி, இடது வாய்க்காலில், 62 கன அடி என, 88 கன அடி நீர் முதல்போக பாசனத்திற்கு கடந்த, 10 ல் திறக்கப்பட்டது. இதனால் வலது வாய்க்காலில், 2,082 ஏக்கர் நிலம், இடது வாய்க்காலில், 5,918 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும், 22 கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மொத்தம், 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறக்கப்படும் என, நீர்வ-ளத்துறை தெரிவித்தது. இந்நிலையில் வலது வாய்க்காலில் திறக்-கப்பட்ட, 26 கன அடி நீர், அன்றைய தினமே சில மணி நேரத்தில் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, 'வலது வாய்க்காலில் சீரமைப்பு பணியால் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது' என நீர்வளத்துறை அதி-காரிகள் தெரிவித்தனர்.கெலவரப்பள்ளி அணை ஷட்டர்களை மாற்றும் பணியால், கடந்-தாண்டு இரண்டு போகத்துக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. அப்போது வாய்க்கால்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டி-ருக்கலாம். அதை விடுத்து பாசனத்திற்கு நீர் திறந்த பின், சீர-மைப்பு பணி மேற்கொள்வதால், 2,082 ஏக்கர் நிலங்களில் விவ-சாய பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.