/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தனியார் ஊழியரிடம் ரூ.6.51 லட்சம் மோசடிதனியார் ஊழியரிடம் ரூ.6.51 லட்சம் மோசடி
தனியார் ஊழியரிடம் ரூ.6.51 லட்சம் மோசடி
தனியார் ஊழியரிடம் ரூ.6.51 லட்சம் மோசடி
தனியார் ஊழியரிடம் ரூ.6.51 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 15, 2024 12:17 AM
கிருஷ்ணகிரி: முதலீட்டுக்கு அதிக லாபம் எனக்கூறி, தனியார் நிறுவன பெண் ஊழியரிடம், 6.51 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, பாகலுார் சாலையை சேர்ந்தவர் சந்தியா, 20; தனியார் நிறுவன ஊழியர்.
இவரது மொபைல் போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் திரைப்ப-டத்திற்கு தர மதிப்பீடு செய்யும் பகுதிநேர வேலை என குறிப்-பிட்டு 'லிங்க்' வந்துள்ளது. அதற்குள் சென்றபோது முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. அதை நம்பிய சந்தியா, அதில் கூறப்பட்டிருந்த வெவ்வேறு வங்கி கணக்கிற்கு, 6.31 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பின்னர் எந்த தகவலும் வரவில்லை. சந்தேகமடைந்தவர் அதிலிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' என வந்தது. அதன் பிறகே ஏமாற்றப்பட்டதை அறிந்து, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை மேற்கொண்டுள்ளார்.