/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் இன்று தமிழகம் வந்தடையும்கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் இன்று தமிழகம் வந்தடையும்
கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் இன்று தமிழகம் வந்தடையும்
கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் இன்று தமிழகம் வந்தடையும்
கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் இன்று தமிழகம் வந்தடையும்
ADDED : ஜூலை 15, 2024 12:17 AM
ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என, நீர்வ-ளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் பெய்து வரும் மழையால், கர்நாட-காவிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 19,027 கன அடியாக உள்ளது. அணை பாது-காப்பு கருதி நேற்று முன்தினம் இரவு, அணையிலிருந்து வினா-டிக்கு, 16,750 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 2,257 கன அடி என, 2 அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு, 19,007 கன அடியாக அதிகரித்து உள்-ளது.
இந்த தண்ணீர், இன்று மாலைக்குள் தமிழகத்திற்கு வந்தடையும் என, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிலுள்ள மத்திய நீர்வ-ளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 4,000 கன அடியாக உள்ளது. இதனால், மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்த-ருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.