ADDED : செப் 11, 2025 01:11 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ., வுமான பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.11) ஓசூருக்கு வருகை தருகிறார். பேலகொண்டப்பள்ளியிலிருந்து சாலை மார்க்கமாக ஓசூர் - தளி சாலையிலுள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு செல்கிறார்.
அதனால், பேலகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, அந்திவாடி, டி.வி.எஸ்., நகர் போன்ற இடங்களில் கட்சியினர் பெரும்திரளாக பங்கேற்று வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும், பாகலுார் சாலையில் அசென்ட் சர்க்யூட் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்ட முதல்வர் செல்கிறார். அப்போது, பாகலுார் சாலை துவக்கத்தில் முதல்வருக்கு பெரும் திரளாக வரவேற்பு அளிக்க வேண்டும். அடுத்த நாள் கிருஷ்ணகிரியில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 85,000 பேருக்கு பட்டா வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.