/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சந்துார் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா துவக்கம்சந்துார் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா துவக்கம்
சந்துார் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா துவக்கம்
சந்துார் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா துவக்கம்
சந்துார் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா துவக்கம்
ADDED : ஜூலை 26, 2024 03:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சந்துார் கிராமத்தில், மாங்கனிமலை மீது வேல்முருகன் வள்ளி தெய்வசேனா சமேத கோவிலில், ஒவ்-வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு, 55ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இன்று (ஜூலை 26) சிறப்பு பூஜை, அபி-ஷேகம் மற்றும் சந்தன காப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை சுவா-மிக்கு அபிஷேக அலங்காரம், வரும், 28 காலை, புஷ்ப அலங்கா-ரமும், மாலை, 7:00 மணிக்கு, சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் நகர்வலம் வருதல், சிலம்பாட்டம், காவடியாட்டம், நையாண்டி மேளம், பம்பை வாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் முக்கிய நாளான வரும், 29 காலை, மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைத்தல், அலகு போடும் நிகழ்ச்சியும், முருகன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர்மக்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.