/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 03:15 AM
கிருஷ்ணகிரி: மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காத தமிழக அரசை கண்டித்தும், காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் நேற்று தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓசூர், மின் வாரிய அலுவலகம் முன் மாநகர, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. இதில், தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த ஆர்ப்பாட்-டத்திற்கு, தே.மு.தி.க., கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் மின் கட்டணத்தை உயர்த்திய, தமி-ழக அரசை கண்டித்து, அம்மிக்கல், ஆட்டுக்கல்லுடன் அக்கட்சி-யினர், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அதேபோல, தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி, தே.மு.தி.க., மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டங்களில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.