/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கல்லீரல் தொற்று பாதிப்பு கண்டறிவதில் அலட்சியம் வேண்டாமென அறிவுறுத்தல் கல்லீரல் தொற்று பாதிப்பு கண்டறிவதில் அலட்சியம் வேண்டாமென அறிவுறுத்தல்
கல்லீரல் தொற்று பாதிப்பு கண்டறிவதில் அலட்சியம் வேண்டாமென அறிவுறுத்தல்
கல்லீரல் தொற்று பாதிப்பு கண்டறிவதில் அலட்சியம் வேண்டாமென அறிவுறுத்தல்
கல்லீரல் தொற்று பாதிப்பு கண்டறிவதில் அலட்சியம் வேண்டாமென அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 26, 2024 12:23 AM
கிருஷ்ணகிரி:'கல்லீரல் தொற்று தினம்' ஆண்டுதோறும் ஜூலை, 28 ல் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கல்லீரல் தொற்று நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் பூவதி தலைமை வகித்து பேசியதாவது:
கல்லீரல் பாதிப்புக்கு முன், தோன்றும் அறிகுறிகள் என்பது மிக குறைவு. அஜீரணம், வாந்தி, துாக்கமின்மை உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும்போது கூட, அதை அலட்சியமாக விடாமல் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டால், இந்நோய் தாக்கத்திலிருந்து விரைவில் மீளலாம்.
மகப்பேறு தாய்மார்கள், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கூட, 'ஹெப்படிட்டிஸ்' எனப்படும் கல்லீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன் மூலம் கடந்தாண்டில், 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர். கல்லீரல் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்த, இன்று மருத்துவ முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் விழிப்புணர்வு அடையாள அட்டை அணிந்து பணியாற்றுகின்றனர்.
வரும் நாட்களில், கல்லீரல் தொற்று நோய் குறித்து, 2ம், 3ம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. நாளை கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நடக்கும், கல்லீரல் தொற்று நோய் முகாமில் மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகரன், துணை முதல்வர் சாத்விகா, பொது மருத்துவத்துறை தலைவர் செந்தில், உள்ளிருப்பு மருத்துவர் செல்வராஜ், புறநோயாளிகள் உள்பட, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.