/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கணவரை எரித்து கொன்றேன்; மனைவி வாக்குமூலம் கணவரை எரித்து கொன்றேன்; மனைவி வாக்குமூலம்
கணவரை எரித்து கொன்றேன்; மனைவி வாக்குமூலம்
கணவரை எரித்து கொன்றேன்; மனைவி வாக்குமூலம்
கணவரை எரித்து கொன்றேன்; மனைவி வாக்குமூலம்
ADDED : ஜூன் 14, 2025 06:59 AM
கிருஷ்ணகிரி: கள்ளக்காதலிக்கு நகை, பணத்தை கொடுத்ததால், தீ வைத்து எரித்து கொன்றதாக, கணவரை கொன்ற வழக்கில் கைதான மனைவி வாக்குமூலம்
அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மா-புரம் பஞ்.,க்குட்பட்ட நேருபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி,47; கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா, 44. இந்நிலையில் ரங்கசாமிக்கும், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால், கவிதா தன் கணவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த, 9 இரவு, 11:00 மணியளவில் வீட்டின் மேல் மாடியில் துாங்கிய ரங்கசாமியை, அவரது மனைவி மண்-ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், 11 காலை ரங்கசாமி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார், கவிதாவை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் திருப்பதியில் உள்ள உறவினர் வீட்டில் கைது செய்தனர்.
போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கவிதா கூறியிருப்ப-தாவது:
எனக்கு திருமணமாகி, ரங்கசாமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். மஞ்சுளாவுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது முதல், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வீட்டில் இருந்த, 80 பவுன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்று மஞ்சுளாவுக்கு செலவு செய்தார். நிலத்தையும், சொந்த வீட்டையும் விற்றுவிட்டார். இதற்கு மேலும் அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை இல்லை. இந்நிலையில் கடந்த, 9ல், வீட்டிற்கு வந்த அவரை மண்-ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
கவிதாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.