/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பல்வேறு குழுக்களாக யானைகள் முகாம்; விவசாய பயிர்கள் சேதம் பல்வேறு குழுக்களாக யானைகள் முகாம்; விவசாய பயிர்கள் சேதம்
பல்வேறு குழுக்களாக யானைகள் முகாம்; விவசாய பயிர்கள் சேதம்
பல்வேறு குழுக்களாக யானைகள் முகாம்; விவசாய பயிர்கள் சேதம்
பல்வேறு குழுக்களாக யானைகள் முகாம்; விவசாய பயிர்கள் சேதம்
ADDED : ஜூன் 14, 2025 06:54 AM
தேன்கனிக்கோட்டை: ஓசூர் வனக்கோட்டத்தில் பல்வேறு குழுக்களாக, 15க்கும் மேற்-பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. பயிர்கள் சேதமாகி வரு-வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சான-மாவு காப்புக்காட்டில், இரு யானைகள், ராயக்கோட்டை வனச்சர-கத்தில் ஊடேதுர்க்கம் வனத்தில், நான்கு யானைகள், தேன்கனிக்-கோட்டை வனச்சரகம், கஸ்பா வனப்பகுதியில், இரு யானைகள், நொகனுார், ஆலஹள்ளி வனத்தில், இரு யானைகள், தாவரக்கரை காப்புக்காட்டில், ஐந்து யானைகள் என மொத்தம், 15 யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிந்து வருகின்றன.
இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்-றன. தாவரக்கரை வனத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு வெளியேறிய ஐந்து யானைகள், அப்பகுதியில் உள்ள நிலங்க-ளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. நேற்று அதிகாலை மீண்டும் யானைகள் வனப்பகுதி நோக்கி சென்றன. யானை-களால் பயிர் சேதம் சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் பல்-வேறு குழுக்களாக பிரிந்து யானைகள் பயிர் சேதம் செய்ய துவங்-கியிருப்பதால், விவசாயிகள் சோகத்தில்
உள்ளனர்.