Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

ADDED : ஜூன் 14, 2025 07:00 AM


Google News
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளியை சேர்ந்-தவர் வெங்கடேசன், 54. தனியார் நிறுவன ஊழியர்; இவர் நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குமுதேப்பள்ளி அருகே தனியார் கார் ேஷாரூம் முன், பாசினோ ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பிக்கப் வாகனம் மோதி, ஓசூர் அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஹட்கோ இன்ஸ்-பெக்டர் சுப்பிரமணி விசாரிக்கிறார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே பொம்மசந்திரா சுப்பி-ரமணிய சுவாமி கோவில் அருகே வசித்தவர் கிருஷ்ணப்பா மனைவி முத்தம்மாள், 61. நேற்று முன்தினம் மதியம், 3:15 மணிக்கு, பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் தர்கா முத்துமாரியம்மன் கோவில் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதி, முத்-தம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us