/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
ADDED : செப் 11, 2025 01:13 AM
ஒகேனக்கல் :ஒகேனக்கல்லில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மற்றும் மீன்வளம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் மேற்பார்வையில், அங்குள்ள மீன் கடைகளில், மீன்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் புரிய, விழிப்புணர்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது, நீர்வீழ்ச்சி செல்லும் சாலை மற்றும் முதலைப்பண்ணை அருகிலுள்ள இறைச்சி மற்றும் மீன் வறுவல் கடைகளில், ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த கூடாது. அதை, உணவு பாதுகாப்பு துறையின் அங்கீகரிக்கப்பட்ட, ரூகோ டீலரிடம் கொடுத்து, உரிய தொகை பெற விழிப்புணர்வு செய்யப்பட்டது. மீன் மற்றும் இறைச்சி, உரிய கண்ணாடி பெட்டியில் வைத்து, பாதுகாப்பாக முறையில் காட்சிப்படுத்தி விற்க அறிவுறுத்தப்பட்டது.
பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன் வள ஆய்வாளர் வேலுசாமி, மேற்பார்வையாளர் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை மீன் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.