/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சூப்பர் மார்க்கெட் பொருட்கள் சூறை கட்டட உரிமையாளர் மீது வழக்கு சூப்பர் மார்க்கெட் பொருட்கள் சூறை கட்டட உரிமையாளர் மீது வழக்கு
சூப்பர் மார்க்கெட் பொருட்கள் சூறை கட்டட உரிமையாளர் மீது வழக்கு
சூப்பர் மார்க்கெட் பொருட்கள் சூறை கட்டட உரிமையாளர் மீது வழக்கு
சூப்பர் மார்க்கெட் பொருட்கள் சூறை கட்டட உரிமையாளர் மீது வழக்கு
ADDED : செப் 11, 2025 01:14 AM
ஓசூர், :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் கோபிநாத், 38. பாகலுார் சாலையோரம் தனியார் வாடகை கட்டடத்தில், சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். கடையை காலி செய்யுமாறு அதன் உரிமையாளர் கிஷோர்குமார் அவரிடம் கூறவே, சிறிது கால அவகாசம் கொடுக்குமாறு கோபிநாத் கேட்டுள்ளார். அதற்கு, சூப்பர் மார்க்கெட்டில் இருந்த, 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தையும், 6 லட்சம் ரூபாய்க்கு தான் வாங்கி கொள்வதாக, கிஷோர்குமார் ஆட்களை அனுப்பி மிரட்டி கேட்டுள்ளார். அதற்கு கோபிநாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த, 10 நாட்களுக்கு முன், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், சூப்பர் மார்க்கெட்டை, கட்டட உரிமையாளர் கிஷோர்குமார் பூட்டி சென்றார். அதனால் கோபிநாத்தால் வியாபாரம் செய்ய முடியவில்லை. குடும்பத்தை கவனிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளானார். இந்நிலையில், நேற்று அதிகாலை சூப்பர் மார்க்கெட்டில் இருந்த கம்ப்யூட்டர், மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கோபிநாத்திற்கு தெரிவிக்காமல், கட்டட உரிமையாளர் கிஷோர்குமார் மூட்டை கட்டி சேதப்படுத்தி வெளியே துாக்கி போட்டார். அதை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு துாக்கி சென்றதால், கோபிநாத்திற்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.
அதன் பின், கிஷோர்குமார் கடையை மூடி சென்றார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஹட்கோ போலீசில் கோபிநாத் புகார் செய்தார். கட்டட உரிமையாளர் கிஷோர்குமார் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.