/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இறந்த எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு ரூ.13.64 லட்சம் நிதியுதவி வழங்கல் இறந்த எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு ரூ.13.64 லட்சம் நிதியுதவி வழங்கல்
இறந்த எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு ரூ.13.64 லட்சம் நிதியுதவி வழங்கல்
இறந்த எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு ரூ.13.64 லட்சம் நிதியுதவி வழங்கல்
இறந்த எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு ரூ.13.64 லட்சம் நிதியுதவி வழங்கல்
ADDED : ஜூன் 30, 2025 03:37 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டெல்லா மேரி. கந்தி-குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 2024 டிச., 6ல், சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக சென்றபோது, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் ரயில் மோதி பலியானார். 1997ம் ஆண்டு, 2வது பேட்ஜில் பணியில் சேர்ந்த அவருக்கு, அந்த பேட்ஜில் உடன் பணியாற்றியவர்களின் காக்கும் காவல் நண்பர்கள் சார்பில், 67வது பங்களிப்பாக, குடும்பத்திற்கு நல நிதி, 13.64 லட்சம் ரூபாயை, கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் நேற்று
வழங்கினார்.
அதன்படி, ஸ்டெல்லா மேரியின் மகனுக்கு, 5 லட்சம் ரூபாய், மகளுக்கு, 5 லட்சம் ரூபாய் அஞ்சல் சேமிப்பு முதலீட்டிற்கான ஆணைகளையும், தாயாருக்கு, 3 லட்சம், கணவருக்கு, 64,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், 1997ம் ஆண்டு, 2ம் பேட்ஜ் காக்கும் காவல் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சீனி-வாசன், ராமச்சந்திரன், வெங்கடேசன், எஸ்.எஸ்.ஐ., சிந்து, சத்திய-மூர்த்தி, விநாயகம், கற்பகம், கோமதி, தேன்மொழி, பரிமளா, புஷ்பலதா, பசுமதி மற்றும் பலர் பங்கேற்றனர்.