/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கூடுதல் துணை சுகாதார நிலையங்கள்: மலைக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு கூடுதல் துணை சுகாதார நிலையங்கள்: மலைக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு
கூடுதல் துணை சுகாதார நிலையங்கள்: மலைக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு
கூடுதல் துணை சுகாதார நிலையங்கள்: மலைக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு
கூடுதல் துணை சுகாதார நிலையங்கள்: மலைக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 30, 2025 03:37 AM
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியத்தில், 28 பஞ்.,க்கள் உள்ளன. இங்கு மொத்தம், 1.70 லட்சத்திற்கும் மேற்-பட்டோர் வசிக்கின்றனர். மக்களுக்கு எளிதாக மருத்துவ
சிகிச்சைகள் கிடைக்கும் வகையில், கிராமப்புறங்களில், 30 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு, செவிலியர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்கள் பணியில் உள்ளனர். கர்ப்பி-ணிகளுக்கான பதிவு, ஆரம்ப கால சிகிச்சை, தடுப்பூசி, குழந்தைக-ளுக்கான தடுப்பூசி செலுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்-கின்றனர்.
மேலும், தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை, புற்று நோய் கட்டி, போன்ற அறிகுறி உள்ள-வர்களை கண்டறிந்து, மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைப்பது போன்ற பல பணிகளை செய்கின்றனர்.
கெலமங்கலம் ஒன்றியத்தில் மலை கிராமங்கள் அதிகமாக உள்-ளதால், அறியாமையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் பாதிப்பு அறிகுறி இருப்பவர்கள் நோயின் தன்மை குறித்து தெரியாமல் சிகிச்சை எடுக்காமல் இருந்து விடுகின்றனர். அதனால், மக்களுக்கு ஆரம்ப சிகிச்சைகள் கிடைக்க செய்து, மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவ
மனைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றால், துணை சுகாதார நிலையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதன்படி, கெலமங்கலம் ஒன்றியத்தில் கூடுதலாக, 16 துணை சுகாதார நிலை-யங்கள் அமைக்க கோரிக்கை
எழுந்துள்ளது.
இதில், சாப்ரானப்
பள்ளி, அனுமந்தபுரம், ராயக்கோட்டை, சொன்னையம்பட்டி, சின்னட்டி, தொட்டமெட்டரை, அக்கொண்டப்பள்ளி ஆகிய, 7 இடங்களில், துணை சுகாதார நிலையம் அமைக்க, தேசிய சுகா-தார இயக்கத்திற்கு, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதிக்காக மருத்துவத்துறை காத்திருக்கிறது. கெலமங்கலம் சுல்தான்பேட்டையில், துணை சுகாதார நிலையம் அமைக்க அனு-மதி கிடைத்துள்ளது. இது தவிர பரிந்துரை செய்ய, 7 இடங்களில் துணை சுகாதார நிலையம் வந்தால், மக்களின் ஆரம்ப சிகிச்-சைகள் எளிதாகும் வாய்ப்புள்ளது.