ADDED : ஜூன் 30, 2025 03:36 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், முனியப்பன், பெரியாண்டவர் பண்டிகை நடந்து வருகிறது. கடந்த, 27 மாலையில், மலையாண்டள்ளி கிராமத்தி-லுள்ள பூங்காவனத்தம்மன் கோவிலில் இருந்து, அம்மனை ஊர்வ-லமாக, காவேரிப்பட்டணம் சண்முகசெட்டி தெருவிலுள்ள சுந்தர-விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று காலை, 7:00 மணிக்கு, சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து சுவாமி பூக்கூ-டையுடன், பூங்காவனம் குழுவினரின் பம்பை, சிலம்பாட்டம், செண்டை மேளத்துடன் ஊர்வலமாக, ஆஞ்சநேயர் கோவில் அரு-கிலுள்ள வனத்திற்கு சென்று, முனியப்பனுக்கு பூஜை நடந்தது.இன்று காலை, 9:00 மணிக்கு, சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம், பூக்கூடையுடன் புறப்பட்டு, ஆஞ்ச-நேயர் கோவில் அருகிலுள்ள வனத்திற்கு சென்று பெரியாண்டவர் பூஜை நடக்க உள்ளது. நாளை காலை, 11:00 மணிக்கு, சுவாமி மஞ்சள் நீராட்டு விழா ஊர்வலம், நாளை மறுநாள் காலை, 5:00 மணிக்கு, சுந்தர விநாயகர் கோவில் முன், சிகை நீக்குதல் நிகழ்ச்சி, காதணி விழா நடக்க உள்ளது. மாலை, பூங்காவனத்-தம்மன் சுவாமி ஊர்வலமாக மலையாண்டள்ளி கோவிலை சென்-றடைய உள்ளது.