ADDED : செப் 09, 2025 02:01 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே காரண்டப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணசாமி, 65. இவருக்கு, 3 மகள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. நாராயணசாமிக்கும், அவரது தம்பி சங்கரப்பாவுக்கும், நிலப்பிரச்னையில் தகராறு இருந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, தன் மகன் சீனிவாசாவுக்கு போன் செய்து, தன்னை சிலர் பின்தொடர்வதாக கூறியுள்ளார்.
மேலும், தன் மகள் விசாலாட்சிக்கு போன் செய்து, மூர்த்தி, அப்பி, லோகேஷ், குட்டி ஆகியோர் தன்னை பின்தொடர்ந்து வருவதாக கூறியுள்ளார். இதை கேட்ட சீனிவாசா, 33, விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு, நிலத்தில் உள்ள மோட்டார் அறையின் படியில், வாயில் நுரை தள்ளிய நிலையில் நாராயணசாமி இறந்து கிடந்தார்.
நாராயணசாமி கால்களில் காயம் உள்ளதால், தன் தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக, சீனிவாசா புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.