/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ திருமணத்திற்கு வைத்திருந்த 7 பவுன் நகை, பணம் திருட்டு திருமணத்திற்கு வைத்திருந்த 7 பவுன் நகை, பணம் திருட்டு
திருமணத்திற்கு வைத்திருந்த 7 பவுன் நகை, பணம் திருட்டு
திருமணத்திற்கு வைத்திருந்த 7 பவுன் நகை, பணம் திருட்டு
திருமணத்திற்கு வைத்திருந்த 7 பவுன் நகை, பணம் திருட்டு
ADDED : செப் 09, 2025 02:01 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் மோகன், 65. இவரது மனைவி புவனேஸ்வரி, 60. இருவரும் கடந்த, 5ம் தேதி, கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். பின்னர் நேற்று காலை வீடு திரும்பினர். அங்கு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த தம்பதி, வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அங்கு, பீரோவில் மகள் திருமணத்திற்கு வைத்திருந்த, 5.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 7 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 5.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது. வீட்டிலிருந்த, சிசிடிவி கேமராவை பார்த்தபோது, மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடியது தெரிந்தது. இக்காட்சிகளை தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்து, மோகன் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.