/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/1.50 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது1.50 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
1.50 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
1.50 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
1.50 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
ADDED : ஜூலை 08, 2024 05:34 AM
கிருஷ்ணகிரி : குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சார்பில் கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை சாலையில், எஸ்.ஐ., அருள் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைத்து, நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாலையில் வந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்த போது, ஆந்திரா மாநிலம் சித்துார் மாவட்டம் குப்பம் தஞ்சமாகொட்டலு கிரா-மத்தை சேர்ந்த சதீஷ், 25, என்பது தெரிந்தது. பின்னர் வாக-னத்தை சோதனை செய்ததில், 50 கிலோ எடை கொண்ட, 30 பைகளில் மொத்தம், 1,500 கிலோ ரேஷன் அரிசி சட்ட விரோத-மாக கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.