8,900 லி., வெளிமாநில மது பறிமுதல்
8,900 லி., வெளிமாநில மது பறிமுதல்
8,900 லி., வெளிமாநில மது பறிமுதல்
ADDED : ஜூலை 08, 2024 05:34 AM
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில், 8,900 லிட்டர் வெளி மாநில மதுவகைகள் பறி-முதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், மாநில எல்லையில் இருப்பதால், போதை பொருட்கள் கடத்தல், கள்ளச்சாராய கடத்தல் உள்ளிட்ட-வற்றை தடுப்பது பெரும் சவாலாக உள்ளது. ஆனால், இதை தடுக்க மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கடந்த, 20 ஆண்டுகளாகவே படிப்ப-டியாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது, 90 சதவீதம் குறைந்துள்ளது. கடந்தாண்டில் மட்டும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்-ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தலுக்கு முயன்ற, 340 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து குறைந்த விலையில் கிடைக்கும் மது வகைகளை வாங்கி கள்ளத்தனமாக விற்பதும், கடத்துவதும் அதிகரிப்பதாகவும் தகவல் கிடைத்தது. அந்த வகையில் கடத்த முயன்ற, 8,900 லிட்டர் அளவிற்கு வெளி-மாநில மதுவகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்-டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்ட, 282 லிட்டர் ஊறல்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கள்ளச்சா-ராயம் காய்ச்ச முயன்ற இருவர், குண்டர் சட்டத்தில் கைது செய்-யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.